இந்தியாவா, சீனாவா என்பதைவிட அபிவிருத்தியே முக்கியம்!

பிரதமர் பதவி விலக வேண்டும் என கோசமிட்டுவரும் வாசுதேவ நானயக்காரவின் கேள்விற்கு பதில் கூறும்போது  பிரதமர்  யார் வேண்டுமானாலும் பதவியில் இருங்கள் எமக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை . ஆனால் நாங்கள்

நாட்டை தூரநோக்கு கொண்ட அபிவிருத்தி திட்டத்தின் அடிப்படையிலேயே செயற்பட்டு  வருகின்றோம்.  இவைகளைப்பற்றி  தெளிவாக தெரிந்து கொள்ளாமல் கருத்துக்களை வெளியிட வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார். அவர் மேலும் உரையாற்றுகையில்

நாட்டை அபிவிருத்தி செய்வது மட்டுமே எமது நோக்கமாகும்,கடந்த காலத்தில் பெற்ற மிகப்பெரிய கடன் தொகையினை நிவர்த்தி செய்து நாட்டை முன்னேற்ற வேண்டிய கடமை எமக்கு உண்டு

சீனாவா? இந்தியாவா? முக்கியம் என நாங்கள் முடிவு செய்யவில்லை, யார் மூலம் நாட்டை அபிவிருத்தியடைய செய்ய முடியும் என்பதை பற்றி மட்டுமே நாம் சிந்தித்து செயற்படுகின்றோம்.

உங்களுக்குள்ளேயும் பிளவுபட்டு பல பிரிவுகள் இருக்கின்றது, முதலில் அதனை சரி செய்து கொள்ளுங்கள்.

நாம் அபிவிருத்தி பாதையில் செல்ல வேண்டிது மட்டுமே முக்கியம். வீணாக குழப்பங்களை ஏற்படுத்த எவரும் முயல வேண்டாம்  என  பிரதமர் தெரிவித்தார்.

Comments