திருகோணமலை: மக்தப் அல் ஸகீனா குர்ஆன் பாடசாலையின் முதலாம் ஆண்டு நிறைவு விழா

திருகோணமலை பெரியகடை ஜும்மா மஸ்ஜீத் பரிபாலன சபையினால் நடாத்தப்பட்டு வந்த மக்தப் அல் ஸகீனா குர்ஆன் பாடசாலையின் முதலாம் ஆண்டு நிறைவு விழா இன்று (06) பெரியகடை ஜும்மா மஸ்ஜீத் பேஸ் இமாம் எஸ்.அஜ்மீர் கான் (தீனி) மற்றும் மௌலவி எப்.ஏ.றசாக்(நஜாயி) ஆகியோர் தலைமையில் பெரியகடை ஜும்மா மஸ்ஜீதில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் விருந்தினர்களாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், சட்டத்தரணியுமான அல்ஹாஜ் ஜே.எம்.லாகீர் , மௌலவி கே.ஆர்.எம்.இன்சாப் (இனாமி), தி /ஸாஹிரா கல்லூரியின் ஓய்வுபெற்ற அதிபர் எஸ்.எம்.முகமட் அலி , மற்றும் ஊர் பிரமுகர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.

Comments