திருகோணமலை வடக்கு கல்வி வலயத்தின் ஆசிரியர் பயிற்சி நிலைய விவகாரம்
திருகோணமலை வடக்கு கல்வி வலயத்தின் ஆசிரியர் பயிற்சி நிலையத்தை கோமரங்கடவெல பகுதியில் அமைந்துள்ள திரியாய் சந்தியில் ஏற்கனவே திட்டமிட்டபடி அமைக்குமாறு அதிபர்கள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சரிடமும்-அமைச்சின் செயலாளரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஆசிரியர் பயிற்சி நிலையத்தை அமைப்பதற்காக 30 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் மக்கள் மத்தியில் அரசியல் ஆதரவினை பெறுவதற்காக கோமரங்கடவெல பகுதியில் அமைக்குமாறு கல்வி திணைக்களத்திடம் பிரபல அரசியல்வாதியொருவர் வேண்டுகோள் விடுக்கும் பட்ஷத்தில் 30 அதிபர்கள் கையொப்பமிட்டு திட்டமிட்டபடி திரியாய் சந்தியில் ஆசிரியர் பயிற்சி நிலையத்தை அமைக்குமாறு கோரி கடிதமொன்றினை கிழக்கு மாகாண
கல்வி அமைச்சருக்கும் -செயலாளருக்கும் வழங்கியுள்ளதாக அதிபர்கள் தெரிவிக்கின்றனர்.
திருகோணமலை-ஹொரவ்பொத்தானை பிரதான வீதிக்கு அருகில் திரியாய் சந்தி உள்ளதாகவும் ஆசிரியர் பயிற்சி நிலையம் கோமரங்கடவெல பகுதியில் அமைக்கப்பட்டால் ஆசிரியர்கள் போக்குவரத்து சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கும் இதேவேளை அரசியல்வாதியொருவர் திரியாய் சந்தி வௌ்ளத்தினால் பாதிக்கப்படும் பகுதியெனவும் தெரிவிப்பதாகவும் கல்வி அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.
ஆசிரியர்களின் விருத்திக்காக நிர்மாணிக்கப்படும் ஆசிரியர் பயிற்சி நிலையத்தை திரியாய் சந்தியில் அமைக்குமாறு வடக்கு கல்வி வலய பணிப்பாளர் மற்றும் அதிபர்கள் ஆசிரியர்கள் விருப்பம் தெரிவித்தபோதிலும் அரசியல் இலாபத்திற்காக அரசியல்வாதி தெரிவிக்கும் கருத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாமெனவும் அதிபர்கள் குறிப்பிடுகின்றனர்.
எனவே ஏற்கனவே திட்டமிட்ட இடத்தில் அமைப்பதற்கு கிழக்கு மாகாண ஆளுனர் -கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் -அமைச்சின் செயலாளர் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் அதிபர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Comments
Post a Comment