மாணவர்கள் கொலை: பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்!
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து பொலிஸ் அதிகாரிகளும் இன்று காலை யாழ் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், நீதிமன்ற வளாகத்தை சுற்றிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
கொக்குவில் குளப்பிட்டி சந்தியில் வைத்து கடந்த 20ஆம் திகதி இரவு யாழ். பல்கலைக்கழக மாணவர்களான விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்கான நிலையில் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஐந்து பொலிஸார் கைது செய்யப்பட்டனர்.
குறித்த ஐவரும் கடந்த 22ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவர்களை இன்றுவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment