ஜனாதிபதி இன்று மீண்டும் இந்தியா பயணம்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இன்று பிற்பகல் அவர் புதுடெல்லியை சென்றடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லியை சென்றடையும் அவர், இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
நொய்டாவில் உள்ள இந்திய எக்ஸ்போ நிலையத்தில் நாளை நடைபெறும் உலக சுகாதார நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புகையிலைப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது தொடர்பான ஏழாவது மாநாட்டில் பங்கேற்கவே, ஜனாதிபதி இந்தியப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.


Comments
Post a Comment