சித்த மருத்துவம்: ஊமத்தை :-


இதற்கு இசிவகற்றி வேதனாசாந்தினி செய்கைகளுண்டு, இதனால் கட்டி, விரணம் நஞ்சுகளின் விஷம் முதலியன குணமாகும். இதன் இலைச்சாற்றுடன் சமன் தேங்காயெண்ணெய்
சேர்த்து காய்ச்சி இரண்டொரு துளி வீதம் காதில் துளித்துவர காது வலி குணமாகும். இன்னும் இத்தைலத்தை விரணங்களுக்கும் மேற் பூசிவர விரைவில் ஆறும். இலையை ஆமணக்கெண்ணெய் விட்டு வதக்கியாவது அல்லது அரிசிமாவுடன் சேர்த்து களிபோல் கிளறியாவது வித்திரிகட்டிகள், வாதவீக்கம் இவைகளுக்கு வைத்துக்கட்ட, அல்லது ஒற்றிடமிட குணமாகும். இதன் இலை அல்லது பூவைப்பொடித்து புகைப்பிடிக்க சுவாசகாசம் குணமாகும்.
கற்ப மூலிகையான இது சுக்கிலத்தையும் பாதரசத்தையும் கட்டும். உடலுக்கு அழகு தரும், பெரு நோய், சொறி சிரங்கு சுரம் இவற்றை போக்கும். தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் தானே செழித்து வளரும். பொன் போன்ற நிறத்துடன் பூக்கள் கொண்ட பொன்னூமைத்தையானது புண், கிரந்தி நாட்பட்ட வயிற்றுப்போக்கு, அதிசுரம், பித்த நோய், நீங்கா விஷசுரம் இவற்றை போக்கும்.
மருள் போன்று சுருட்டிக்கொண்டு சிறிய அளவில் இருக்கும் மருளுமத்தையானது குளிர்காய்ச்சல், நீர்க்கோவை, சிறு பூச்சிகளின் விஷங்கள், மந்தம், வாதநோய் நீக்கும். இலையை சுருட்டி புகை பிடிக்க இரைப்பு மூக்கடைப்பு நீங்கும். இலையை சுருட்டி புகை பிடிக்க இரைப்பு, மூக்கடைப்பு, நீங்கும். இதனால் வாயு, எலும்பு வீக்கம், பால் கட்டிக்கொள்ளுதலால் ஏற்படும் வலி நீங்கும். இலையை நல்லெண்ணெயில் வதக்கி கட்ட வாத வலி, மூட்டு வீக்கம், வாயுக்கட்டிகள், அண்டவாயு, தாய்ப்பால் கட்டிக்கொண்டு வலித்தல், நெரிகட்டுதல் குணமடையும்.
நரம்புகள் சுருட்டிக்கொண்டு ரத்த ஓட்டம் தடைப்பட்டு வலியுடன் அவதிப்படுபவர்கள் அரிசிமாவு, ஊமத்தன் இலையும் அரைத்து களிபோல் கிண்டி ஒற்றமிட நரம்புசிலந்தி நோய் நீங்கும். இலைச்சாற்றுடன் சம அளவு நல்வெண்ணெய் கலந்து காய்ச்சி, இளம் சூட்டில் 2 துளிகள் காதில் விட்டு வந்தால் சீதளத்தால் வந்த காது வலி தீரும். இலையை நீர்விடாது அரைத்து அதனுடன் நல்லெண்ணெயில் வதக்கி நாய் கடித்த புண்ணில் கட்டி வந்தால் புண் ஆறும். இலையின் 3 துளி சாறு எடுத்து வெல்லம் கலந்து காலை மாலை 3 நாட்கள் மட்டும் கலந்து கொடுக்க நஞ்சு போகும்.
இலைச்சாறு 500மிலி, தேங்காய் எண்ணெய் 500மிலி கலந்து அதில் கடை சரக்கு என்னும் மயில் துத்தம் 30 கிராம் போட்டு சுண்டக்காய்ச்சி பீங்கான் அல்லது கண்ணாடி பாட்டிலில் வைத்து கொண்டு அனைத்து வகையான புண்களுக்கு மேல் பூச்சாக தடவி வர குணமடையும். வெறி நாய் கடித்தால் கரும்பு வெல்லத்தில் இலையின் சாறு 1 முதல் 3 துளி வரை விட்டு உள்ளுக்கு 3நாள் கொடுத்து, பால் சோறு, மோர் சோறு, கொடுக்க நஞ்சு நீங்கும். மருந்துண்ணும் காலத்தில் உப்பு, புளி நீக்கவேண்டியது அவசியம். (மூன்று நாட்கள் கடும் பத்தியம்) இதைத்தான்
நாய்க்கடியான் வந்து நலிசெய் விரணமும்போம்
வாய்க்குழிப்புண் கட்டிகளு மாறுங்கள் தீக்குணத்தைச்
சேமத்தில் வைத்திலிடந் தீரு முத்தோடங் களறும்
ஊமத்தை யின்குணத்தை யுன்னு-, என்கிறது அகத்தியர் குணவாகடம்.
40வயதிற்கு உட்பட்வர்கள் தலையில் புழுவெட்டால் முடி முளைக்காமல் இருந்தால் ஊமத்தை பிஞ்சை எடுத்து அவரவர் உமிழ் நீரில் மைய அரைத்து புழுவெட்டு உள்ள இடத்தில் தடவிவர தலையில் உள்ள புழுவெட்டு தீர்ந்து -முடி முளைக்கும். சிறு அளவில் நச்சு தன்மை கொண்டதால் ஊமத்தையை அரைத்த பிறகு கைகளை நன்றாக கழுவிட வேண்டும்.
பூ, விதை, இலையை பாலில் போட்டு வேகவைத்து அதனை நிழலில் காய வைத்து தூள் செய்து வைத்துக்கொண்டு சுடு நெருப்பில் போட்டு அந்த புகையை உள்ளிளுத்தால் இழுப்பு, மூச்சு திணறல், குமாகும்.
கோடை காலத்தில் சிலர் தன் நிலைமாறி பிதற்றுவதும், வெறித்துப் பார்ப்பதும், ஆடைகளை அவிழ்த்துவிட்டு ஓடுவதுமாய் இருப்பார்கள். இதை பில்லி சூனியம் என்பார்கள். ஊமத்தம் பூவை இரவு தண்ணீரில் போட்டு ஊறவைத்து மறுநாள் காலை தலைக்கு தேய்த்து குளிக்க வேண்டும். இதுபோல் 5 முதல் 7 நாட்கள் வரை குளிக்க வைத்தால் சித்தபிரமை, கண்மந்தம், பைத்தியம் குணமாகும்.
விதைகளை மென்மையாக அரைத்து வெளிப்பூச்சாக தடவி வர பற்சிதைவினால் ஏற்படும் வலி மூலம், கொன்னி கரப்பான், சொறி வெண்மேகம் ஆகியவை தீரும்.
வாதமறும், பித்த மயக்கமுறு மாநிலத்திற்
றீது கரப்பான் சிரங்ககலுங் கோதாய்கேள்
மாமத்த மாகும் வறசியெல் லாம்போகும்.
ஊமத்தங் காய்க்கென் றுரை. என்கிறது.
பொதுவாக நோய்தணிப்பானாகவும், சிறப்பாக இசிவு நோய் தணிப்பானாப்பானகவும் செயற்படும். அறுவை சிகிச்சைக்கும் மகப்பேருக்குமயக்க மருந்தாகவும் பயன்படுகிறது.
இலையைநல்லெண்ணெயில் வதக்கிக் கட்ட வாதவலி, மூட்டு வீக்கம், வாயுக்கட்டிகள், அண்ட வாயு, தாய்பால் கட்டிக்கொண்டு வலித்தல், நெரிகட்டுதல், ஆகியவை குணமடையும்.
இலைச்சாற்றுடன் சமன் நல்லெண்ணெய் கலந்துகாச்சி, இளஞ்சூட்டில் 2-3 துளி காதில் விடச்சீதளத்தால் வந்த காது வலிதீரும்.
இலையை நீர் விடாது அரைத்து நல்லெண்ணெயில் வதக்கி நாய்கடிப் புண்ணில்கட்ட ஆறும்.மூன்று துளிச் சாறு வெல்லம் கலந்து காலை,மாலை 3 நாள் மட்டும் கொடுக்க நஞ்சு தீரும்.கடும் பத்தியம்- பகலில் தயிர் சோறும்இரவில் பால் சோறும் உப்பில்லாமல் சாப்பிடவும்.
இலைச்சாற்றைச் சமளவு தேங்காய் எண்ணெயில் காச்சி சிறிதளவு மயில் துத்தம் கலந்து வெளிப்பூச்சாகப் பயன்படுத்த ரணம் சதைவளரும் புண்புரைகள், தீரும்.
ஊமத்தைப் பிஞ்சை அவரவர் உமிழ் நீரில்மையாய் அரைத்துத் தடவ புழுவெட்டு தீரும்,புழு இறந்து முடி வளரும்.
இலை, பூ, விதை மூன்றையும் பாலில் பிட்டவியலாய் அவித்து உலர்த்தி, தூள் செய்து (ஒன்றிரண்டாய்) பிடியாய்ச் செய்து புகைக்க ஆஸ்துமா, மூச்சுத்திணரல் உடனே குறையும்.
ஊமத்தை மயக்கத்தை உண்டாக்கும். விடத்தன்மையுடையது. இதன் விடம் முறிய தாமரைக்கிழங்கை அரைத்து பாலில் இரு வேழை மூன்று நாள்கொடுக்கலாம். இக்காய் பில்லி, சூன்யம் ஆகியவற்றை அகற்றும், முறிக்கும்.
சித்தம் பிரமை -: ஊமத்தம் பூவை இரவு தண்ணீரில்போட்டு ஊறவைக்கவும். மறு நாள் காலைதலைக்குத் தேய்த்துக் குளிக்கவைக்கவும். 5-7 நாள் இவ்வாறு குளிக்க வைத்தால் இந்தப் பிரமை உன்மத்தம், பைத்தியம் குணமாகி விடும்.
அனைத்து வகைப் புண்ணுக்கும். - ஊமத்தம்இலைச்சாறு 500 மி,லி.தேங்காய் எண்ணெய்500 மி.லி. கலந்து மயில் துத்தம் 30 கிராம்போட்டு சுண்டக் காச்சி சாறு வடிக்கவும்.இதனை அனைத்து வகையான புண்களுக்கும்மேல் பூச்சாக இட குணமடையும்.மேகப் புண், நீரிழிவுப்புண், ஆராத குழிப்புண், வளர் புண் குணமடையும்.
பேய்குணம் - :இதன் காய்,விதையும், மருதாணிப் பூவும், உலர்த்திய தூள் புகைக்க பேய் குணம் விலகும்.-ஊமத்தை இலை சாறு சூடேற்றி தேய்க்கும் போது பேன்,ஈறு தொல்லை நீங்கும்
இலை : இலையை நல்லெண்ணெயில் வதக்கி, இதமான சூட்டில் ஒத்தடமாகக் கொடுத்து, கட்டி வந்தால் வாதவலி, மூட்டுவலி, வாயுக்கட்டிகள், அகண்ட வாயு, தாய்ப்பால் கட்டிக்கொண்டால் மார்பகங்களில் ஏற்படும் வலி ஆகியவை குறையும்.
இலையைக் காயவைத்து பொடியாக்கி குண்டுமணி அளவு தேனில் கொடுத்தால் சுவாசகாசம் குணமாகும்.
இலை, பூ, விதை, மூன்றையும் சம அளவாக எடுத்து பாலாவியில், பிட்டவியலாக்கி அவித்து உலரவைத்து, ஒன்றிரண்டாக இடித்து அதில் சிறிது அளவு ஒரு இலையில் வைத்து சுருட்டாக்கி புகைத்தால் மூச்சுத் திணல் குணமாகும். இலையுடன், சம அளவு அரிசி மாவு சேர்த்து தண்ணீர் விட்டு அரைத்து களிபோலக் கிளறி, இதமான சூட்டில் பற்று போல போட்டு வந்தால், மூட்டு வீக்கம், வலியுள்ள கட்டிகள், வெளிமூலம் போன்றவை குணமாகும்.
இலைச்சாற்றை 2, 3 துளி அளவு வெல்லத்தில் கடைந்து காலை, மாலை 3 நாட்கள் கொடுத்து பத்தியமாக இருந்து வந்தால் வெறி நாய்க்கடி விஷம் தீரும். உப்பு, புளியை நீக்கி, பால், மோர், சோறு மட்டுமே சாப்பிட்டு வர வேண்டும். இலையை தண்ணீர் விடாமல் அரைத்து, நல்லெண்ணெயில் வதக்கி புண்ணில் கட்டினால் புண் ஆறும்.
இலைச் சாற்றுடன், அதே அளவு தேங்காயெண்ணெய் கலந்து பதமாகக் காய்ச்சி ஒரு சில துளிகளைக் காதுகளில் விட்டு வந்தால் ஏற்படும் காதுவலி குணமாகும்.
இலைச் சாற்றுடன், அதே அளவு தேங்காய் எண்ணெயும் கலந்து பதமாகக் காய்ச்சிய பிறகு, சிறிதளவு மயில் துத்தம் தூளாக்கி போட்டு வடிகட்டிய பின் மேலாக பூசி வந்தால் புரையோடிய புண், சதை வளரும் புண், ஆறாதபுண் எனும் புண் பிளவையும் கூட குணமாக்கும்.
காய் : வாதநோய், கரப்பான், கிரந்தி, சொறி நீக்கும். பித்த மயக்கத்தை உண்டாக்கும்.
பிஞ்சு : இதன் பிஞ்சை எச்சிலில் அரைத்துத் தடவி வர புழுவெட்டு தீரும்.
விதை : இதன் விதையை நெய்யில் அரைத்து மூல முளையில் பூசி வந்தால் குணமாகும்.
50 கிராம் அளவு விதையை ஒன்றிரண்டாய் இடித்து சுமார் 400 மிலி அளவு நல்லெண்ணெயில் இட்டு 7 நாட்கள் பொறுத்து அரைத்து, வெயிலில் வைத்து வடிகட்டி வைத்திருந்து, அடிவயிற்றில் தடவி வந்தால் சூதக வயிற்று வலியும், நீர்த்தாரை எரிச்சல் குணமாகும். கன்னம், முகம், காது என அனைத்து பகுதிகளிலும் ஏற்படும் குடைச்சல் நோய்க்கு தடவி வந்தால் குணமாகும்.
வேர் : விதை மற்றும் வேர் வயிற்றுப் போக்கை தடுக்கிறது. காய்ச்சலைப் போக்கி, கிருமிகளுக்கு எதிராகச் செயல்படுகிறது. தனது நிலையை மறந்தவர்களுக்கு மருந்தாகிறது. தோல் வியாதிகளைப் போக்குகிறது
ஆச்சார்யர் சரகர் இந்த ஊமத்தையை விஷ சிகிச்சையிலும் தோல் வியாதி சிகிச்சையிலும் கூறுகிறார் .
ஆசார்யர் சுஸ்ருதர் முக்கியமாக அலர்க விஷம் என்னும் -நாயகடியால் ஏற்படும் ரேபிஸ் நோயில் கூறுகிறார் .
ஹிரித சம்ஹிதையில் மூல நோய்க்கான சிகிச்சையில் கூறுகிறார் .
பயன்பாடுகளில் -ஜ்வரம்,தோல் நோய்கள் ,புண் ,அரிப்பு ,கிருமி ,விஷ ரோகம் ,நீர் கடுப்பு
நாய் கடிகளில்(அலர்க்க விஷம் ) -ஊமத்தை ,வெள்ளை சாரணை வேர் இரண்டும் சேர்ந்து நாய்கடி விஷத்தை போக்கும்
கிருமி -ஊமத்தை இலை சாறு சூடேற்றி தேய்க்கும் போது பேன்,ஈறு தொல்லை நீங்கும்
பிடக ஆமாய -வேனல் கட்டிகளில் -வல்லாரை இலை சாறு+ஊமத்தை வேர் -வேனல் கட்டிகளுக்கு ,கட்டிகளை கரைக்க வெளிப்ர்யோகமாக உதவும்
மருந்து கடைகளில் கிடைக்கும் மருந்துகளில் -கனகாசவம் ,சூத சேகர ரசம் ,மகா விஷ கர்ப்ப தைலம் ,உன்மத்த ரசம்
ஆஸ்தமா குணமாக -கனகாசவம் உதவும்
அட்ரோபின் என்னும் ஆங்கில மருந்துக்கு இது தாய்.-தற்கொலைக்கு விஷம் சாபிட்டவர்களின் உயிர்களை இந்த அட்ரோபின் காப்பாற்றி யுள்ளது எனவே -ஆயுர்வேத சித்தா மருந்துகில் குறிப்பிட்டது போல் விஷ வைத்தியத்தில் உதவுகிறது .
அட்ரோபின் கண்ணின் விழிபாவையை விரிக்க உதவும் .இந்த கண் சொட்டு மருந்து இல்லாமல் கண் விழித்திரையை எந்த கண் மருத்துவரும் பார்க்கமுடியாது
அகத்தியர் குணவாடகம்.
--------------------------------------------------------------------------------
மதுரை சித்த மருத்துவ ஆலோசனை மற்றும் சந்தேகங்களுக்கு,
மதுரை பாரம்பரிய சித்த மருத்துவர்,
லாசர் ஐயா +919790357196
---------------------------------------------------------------------------------
வர்ம மருத்துவம் மற்றும் சித்த மருத்துவம் சார்ந்த ஆலோசனைகளுக்கு
பாரம்பரிய வர்ம மருத்துவர் ,
எட்வர்ட் ஐயா ,(+919092427299)
மதுரை
--------------------------------------------------------------------------------
அறந்தாங்கி சித்த மருத்துவ ஆலோசனை மற்றும் சந்தேகங்களுக்கு,
அறந்தாங்கி பாரம்பரிய சித்த மருத்துவர்,
அறந்தை செந்தில்குமார் ஐயா(+919965745268),
அறந்தாங்கி
--------------------

Comments