சவூதியில் இரு வருடங்களாக பணிபுரிந்த இளம் குடும்பஸ்தர் சடலமாக திருப்பியனுப்பப்பட்டார் : அட்டனில் மற்றுமொரு துயரச் சம்பவம்
.
சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த நிலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த இளம் குடும்பஸ்தரின் சடலம் சுமார் 3 மாதங்களுக்கு பின்னர் இன்று இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இன்ஜஸ்ரி தோட்டம் பீரட் பிரிவைச் சேர்ந்த 33 வயதுடைய 5 வயதுடைய பிள்ளையின் தந்தையான, அகஸ்டின் என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் சவூதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
இவரின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவர உரிய ஆவணங்கள் குடும்பத்தாரால் சவூதிக்கான இலங்கை தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்ட போதும், சுமார் 3 மாதங்கள் இழுபறிக்குள்ளான நிலையில் இன்று சடலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபரின் இறுதிக்கிரியைகள் டிக்கோயா போடைஸ் பொதுமயானத்தில் நாளை காலை 10 மணியளவில் இடம்பெறும்.
தனது இரண்டு வருட சேவை காலம் முடிவடைந்து கடந்த ஆகஸ்ட் மாதம் நாடு திரும்ப இருந்த நிலையிலேயே இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-----------
மஸ்கெலியா பகுதியிருந்து வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்றவர் உயிரிழந்தார் : தவிக்கும் பிள்ளைகள் (காணொளி இணைப்பு)

. நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இன்ஜஸ்ரி தோட்டம் பீரட் பிரிவைச் சேர்ந்த 33 வயதுடைய 5 வயதுடைய பிள்ளையின் தந்தையான, அகஸ்டின் என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் சவூதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
இவரின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவர உரிய ஆவணங்கள் குடும்பத்தாரால் சவூதிக்கான இலங்கை தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்ட போதும், சுமார் 3 மாதங்கள் இழுபறிக்குள்ளான நிலையில் இன்று சடலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபரின் இறுதிக்கிரியைகள் டிக்கோயா போடைஸ் பொதுமயானத்தில் நாளை காலை 10 மணியளவில் இடம்பெறும்.
தனது இரண்டு வருட சேவை காலம் முடிவடைந்து கடந்த ஆகஸ்ட் மாதம் நாடு திரும்ப இருந்த நிலையிலேயே இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-----------
மஸ்கெலியா பகுதியிருந்து வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்றவர் உயிரிழந்தார் : தவிக்கும் பிள்ளைகள் (காணொளி இணைப்பு)

Comments
Post a Comment