முகநூல் நட்பில் இருக்கும் இஸ்லாமிய சகோதர சகோதரிகலுக்கு ஒருசிறிய வேண்டுகோள்..

முகநூல் நட்பில் இருக்கும் இஸ்லாமிய தாய்க் குலங்களே தயவு செய்து உங்கள் பேஸ்புக்கில் Edit your contact and basic info வில் போயி Basic Information லில் எடிட் கொடுத்து பிறந்த நாள் உங்களுக்கு மட்டும் தெரியும் படி only me கொடுத்து மறைத்து வையுங்கள். இன்ஷா அல்லாஹ்!
முகநூலில் பெண் சகோதரிகளுக்கு பிறந்த நாள் என்று கேக் படத்துடன் காட்டியவுடன் எங்கிருந்துதான் கெளம்பி வருவாய்ங்களோ தெரியாது கேக்குகள் படத்தையும் பூங்கொத்துகளின் படங்களையும் தூக்கி கிட்டு. ஹேப்பி பார்த் டெ தோழி என்று. ஸ்ஸப்பா தங்க முடியவில்லை.
பிறந்த நாள் கொண்டாட்டங்கள் இஸ்லாத்தில் உண்டா ?
ஆயிரம் தடவை சொல்லியாச்சு இஸ்லாத்தில் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் இல்லை என்று ஆனாலும் முகநூல் ஜொல்லார்கள் பிறந்த நாள் என்கிற சாக்கில் வாழ்த்துகள் நூல் விடுவதற்க்கு தயங்குவதில்லை.
பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது இஸ்லாத்தில் இல்லை. ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து மரணிக்கும் வரை அவன் கடைபிடிக்க வேண்டிய சந்தோஷமான துக்கமான காரியங்கள் அனைத்தையும் இஸ்லாம் கற்றுத் தந்திருக்கின்றது. இதில் பிறந்தநாள் கொண்டாட்டத்தை இஸ்லாம் குறிப்பிடவில்லை.
இந்த சமுதாயத்துக்கு பெரும் பாக்கியமாக அனுப்பப்பட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது பிறந்த நாளை அவர்களும் கொண்டாடவில்லை. கொண்டாடுமாறு மக்களுக்கும் கூறவில்லை. ஏன் நபி (ஸல்) அவர்களால் உருவாக்கப்பட்ட நபித்தோழர்களிடையே இப்படிப்பட்ட ஒரு கலாச்சாரம் இருக்கவில்லை.
பிறந்தநாள் கொண்டாடுவது என்பது அறிவுக்கு பொருந்ததாது.
இஸ்லாத்தில் இதுபோல இறப்புக்கும் பிறப்புக்கும் 'வருடாந்திர நினைவு நாள்' துக்கமாக இருப்பதோ அல்லது கொண்டாடுவதோ கிடையாது. இறந்த அன்றும் அடுத்த இரண்டு நாள் மட்டும் துக்கம் அனுஷ்டிக்கலாம். குழந்தை பிறந்த 7ம் நாள் ஆடு அறுத்து 'அகீகா' விருந்து போட்டு (மூன்றில் ஒரு பங்கை ஏழைக்கு கொடுத்து ) கொண்டாடலாம்..!
ஆனால், 'அடுத்த வருடம் மீண்டும் ஆடு அறுக்கனுமா' என்றால்... கிடையாது..! ஏன்..?
இவ்விஷயத்தில் இஸ்லாம் தெளிவாகவே இருக்கிறது. மனிதனுக்கு பிறந்தநாள் ஆயுளுக்கு ஒருமுறைதான் வரும் என்று..! அதேபோல... மனிதனுக்கு ஆயுளுக்கு இறந்த நாள் என்பதும் ஒரே ஒரு முறைதான்..!
மாற்றுக் கலாசாரத்தை பின்பற்றி மறுமையில் மாட்டிக் கொள்ளாதீர்கள்.
மனிதனுடைய பிறப்பில் அவனுடைய சாதனை எதுவும் இல்லை. ஒவ்வொரு மனிதனுடைய பிறப்பும் அவன் வளர்வதும் இறைவனுடைய அருளாலே நடந்துகொண்டிருக்கின்றது. எனவே இதில் மனிதன் தன்னை பெருமைப்படுத்திக்கொள்வதில் என்ன தத்துவம் அடங்கியிருக்கின்றது?
மேலும் இறைவன் நமக்கு விதித்த காலக்கெடுவில் ஓராண்டு கழிந்துவிட்டது எனக் கவலைப்படுவதைத் தவிர பிறந்த நாளில் சந்தோஷப்படுவதற்கு என்ன இருக்கின்றது?
இது பிற்காலத்தில் கிறிஸ்தவர்களிடமிருந்து காப்பியடிக்கப்பட்ட கொண்டாட்டமாகும். கிரிஸ்தவர்களின் கெட்ட கலாச்சாரத்தை நாம் பின்பற்றக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
3456حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ حَدَّثَنَا أَبُو غَسَّانَ قَالَ حَدَّثَنِي زَيْدُ بْنُ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَتَتَّبِعُنَّ سَنَنَ مَنْ قَبْلَكُمْ شِبْرًا بِشِبْرٍ وَذِرَاعًا بِذِرَاعٍ حَتَّى لَوْ سَلَكُوا جُحْرَ ضَبٍّ لَسَلَكْتُمُوهُ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ الْيَهُودَ وَالنَّصَارَى قَالَ فَمَنْ رواه البخاري
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறினார்கள் :
''உங்களுக்கு முன்னிருந்த(யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்கலின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்''என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், ''அல்லாஹ்வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''வேறெவரை?'' என்று பதிலலித்தார்கள். புகாரி (3456)

வலையுகம் ஹைதர் அலி

Comments