மக்களே அவதானம் : ஆடையின்றி விசித்திரமான கொள்ளை - பொகவந்தலாவையில் சம்பவம்
குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து தாயை அச்சுறுத்தி இரண்டரை பவுன் பெறுமதியான தங்க மாலைவொன்றை கொள்ளையிட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இன்று விடியற்காலை 2.45 மணியளவில் பொகவந்தலாவை கெர்க்கஸ்வோல்ட் மத்திய பிரிவு தோட்டத்திலே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வீட்டில் தாய் தனது 10 மாத குழந்தை மற்றும் 6 வயது மகனோடு நித்திரையில் இருந்துள்ளார்.
இவ்வேளையிலேயே, வீட்டின் கதவை உடைத்து கொண்டு உட்பகுந்த திருடன் தங்க மாலையை களவாடி சென்றுள்ளதாகவும் குறித்த திருடன் ஆடையின்றி முகத்தை மாத்திரம் கறுப்பு துணியால் மறைத்து கொண்டு வந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
குறித்த பெண்ணின் கணவர் இரவு வேலைக்கு சென்றதன் பிறகே இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கபடுகிறது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொகவந்தலாவ பொலிஸார் மோப்ப நாய்களை பயன்படுத்தி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ள நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Comments
Post a Comment