எமது கண்ணீர் உம்மை கரைக்கவில்லையா' : தொண்டர் ஆசிரியர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்
நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி வடமேல் மாகாண தொண்டர் ஆசிரியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர் . கொழும்பு - காலி முகத்திடலில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுமார் 80 க்கும் மேற்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் கலந்துக் கொண்டிருந்தனர்.
மேலும் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கர்ப்பிணி ஆசிரியர்களும் கலந்து கொண்டதோடு தமக்கான நிரந்தர நியமனம் உடனடியாக வழங்கப்பட வேண்டும் எனவும் , வட மேல் மாகாண கல்வி அமைச்சு, கல்வி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட தரப்பினர் தம்மை தொடர்ச்சியாக புறக்கணித்து வருவதாகவும் குற்றம் சுமத்தினர்.
இதன்போது குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டிருந்த தொண்டர் ஆசிரியர்களினால் வட மாகாண தொண்டர் ஆசிரியர்களின் கண்ணீருக்கு உடனடியாக பதில் கூறு , எமது கண்ணீர் உம்மை கரைக்க வில்லையா , எமது உரிமையை எமக்கு பெற்றுக் கொடு , கல்வி அமைச்சரே எம்மை புறக்கணிக்க காரணம் என்ன , வட மாகாண கல்வி அமைச்சே எமது கண்ணீருக்கு உடனடியாக பதில் கூறு போன்ற எதிர்ப்பு கோசங்கள் எழுப்பப்பட்டது.

Comments
Post a Comment