மக்கள் விளைவை நன்கு அறிந்துள்ளனர்!

அரசாங்கம் மக்களை ஏமாற்றலாம் எனக் கனவு காண்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்டத்தை  என்ன பாஷையில் பேசினாலும், இறுதி முடிவு என்ன என்பதை மக்கள் நன்கு அறிந்தே வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அளுத்கம கந்தே விகாரையில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

ஜனாதிபதி இந்த வரவு செலவுத் திட்டத்தை சிறந்தது என தெரிவித்துள்ளாரே? என்பதாக ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் கூறியதற்கு,

யாருக்காவது நோவினை செய்வதாயின் அவருக்கு அதில் அலாதியான சந்தோஷம். வரவு செலவுத் திட்டத்தினால், மக்களுக்கு கஷ்டம் ஏற்படுவதாயின் அதன் மூலம் அவருக்கு சந்தோஷம் என்பதாகவும் மஹிந்த ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டார்.

Comments