டுபாயில் பணிபுரியும் தொழிலாளர்களின் கவனத்திற்கு!
இலங்கை உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து டுபாய்க்குச் வேலைக்காக செல்லும் புலம் பெயர் தொழிலாளர்கள் அந்த நாட்டு அரசாங்கம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.புலம் பெயர் தொழிலாளர்கள் தங்களுக்கான மருத்து காப்புறுதியை உடனடியாக பெற்றுக் கொள்ளுமாறு அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
அவ்வாறு எடுக்காதவர்கள் மாதாந்தம் 500 திர்ஹம் அபராதமாக செலுத்தப்படவேண்டும் என்றும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
மருத்துவக்காப்பீட்டுக்காக வழங்கப்பட்டிருந்த காலக்கெடு கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்துள்ள நிலையில் அங்கு பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களில் 12 வீதமானவர்கள் இதுவரை மருத்துவக்காப்பீடு எடுக்கவில்லை என்று அறிய வந்ததையடுத்தே அந்நாட்டு அரசாங்கம் இவ் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
தொழில் புரியும் நிறுவனங்கள், தொழில்வழங்குநர்கள் அவர்களுக்கு கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கான காப்பீட்டை பெற்றுக்கொடுக்க வேண்டும். அதற்கான பணத்தை ஊழியர்களிடமிருந்து அறவிடுவது சட்டவிரோமான செயலாகும். இதேவேளை, அங்கு தனிப்பொறுப்பில் வசிக்கும் பெற்றோர் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு பொறுப்பானவர்கள் மருத்துவக்காப்பீட்டை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
வீட்டுப் பணிப்பெண்கள், வீட்டுச் சாரதிகளுக்கு அவரவர்களுடைய முதலாளிமார் மருத்துவக்காப்பீட்டை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
அபுதாபியில் ஏற்கனவே மருத்தவக்காப்பீடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மருத்துவக்காப்பீடு இருந்தால் மட்டுமே குடும்பங்களை வரவழைப்பதற்கான வீசா அனுமதி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment