கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் கீழ் பாரம்பரிய கைப்பணிக் கிராமங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலக பிரிவு

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் கீழ் பாரம்பரிய கைப்பணிக் கிராமங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு உபகரணம் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.

இந்நிகழ்வு காத்தான்குடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலக செயலாளர் ஹனீபா , இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இணைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பரீட் , பிரதி அமைச்சரின் இணைப்பாளர் சட்டத்தரணி றூபி, மாஹிர் ஹாஜி மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.

KM Jiffry




Comments