மின்சாரத்தை வழங்குமாறு மக்கள் கோரிக்கை!

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு கரும்புள்ளியான் கொம்பறுத்தகுளம் ஆகிய பகுதிகளில் தாங்கள் மீள்குடியேறி ஏழு ஆண்டுகளாகியும் இதுவரை மின்சாரம் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் தமக்கான மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி இப்பகுதி மக்கள் மாவட்ட அரச அதிபர் பிரதேச செயலர் ஆகியோருக்கு மகஜர்களை கையளித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கடந்த 2009ம் ஆண்டு மீள்குடியேறிய பகுதிகளாக காணப்படும் மாந்தை கிழக்கு கொம்பறுத்தகுளம் கரும்புள்ளியான் ஆகிய கிராமங்களின் ஒரு பகுதியான கல் குவாறி வீதிக்கு இதுவரை மின்சாரம் வழங்கப்படவில்லை என்றும் இதற்கான  வசதிகளை ஏற்படுத்தி தருமாறு இப்பகுதி மக்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர்களை மாந்தை கிழக்கு பிரதேச செயலர் அவர்களிடம் நேற்று  கையளித்துள்ளனர்.

அத்துடன் மாவட்ட அரச அதிபருக்கான மகஜரினையும் நேற்று அனுப்பி வைத்துள்ளதுடன் குறித்த பகுதியானது யுத்தத்தின் பின்னர் முதன் முதலில் மக்கள் மீள்குடியேறுவதற்கு அனுமதிக்கப்பட்ட பகுதியாகவுள்ளதாகவும் ஆனால் இன்றுவரையும் தமக்கான மின்சார வசதிகள் உள்ளிட்ட வசதிகள் இதுவரை ஏற்படுத்தித்தரவில்லை என்றும் இப்பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளார்.

Comments