இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை : ஜனாதிபதி

இனவாதத்தை தூண்டும் செயற்பாடுக ளில் ஈடுபடுவோரை பாரபட்சமின்றி கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதி பதி மைத்திரிபால சிறிசேன உத்தரவு பிறப்பித்துள்ளார். நாட்டில் இனவாதத்தை விதை த்து அரசாங்கத்தை அசெளகரியத்துக்கு உட்படுத்தும் மறைமுக நிகழ்ச்சி நிரல் ஒன்று அமுல்படுத்தப்பட்டு வருவதாக புலனாய் வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ள நிலை யில், பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு ஜனாதிபதி இந்த உத்தரவை நேற்று நேரடியாக பிறப்பித்துள்ளார்.
நேற்றைய தினம் பாதுகாப்பு சபைக் கூட்டத்தை தொடர்ந்து இடம்பெற்ற விசேட கூட்டம் ஒன்றினையடுத்தே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸ் மா அதி பர் பூஜித ஜயசுந்தரவுக்கு
நேரடியாக இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். அத்துடன் இனவாததை கட்டுப்படுத்த விசேட சட்ட ஏற்பாடுகளைக் கொண்டுவருமாறும் இதன் போது ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் பாதுகாப்பு சபைக்கூட்டம் வழமைபோல் இடம்பெற்றது. இதன் போது தேசிய மட்டத்தில் ஆராயப்படவேண்டிய பல விடயங்கள் ஜனாதிபதி முன்னிலையில் இடம்பெற்றன. இதனையடுத்து இடம்பெற்ற விசேட கூட்டத்தில் ஜனாதிபதி அமைச்சர் மனோ கணேசன், சிறைச்சாலைகள், புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமி நாதன், சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க, தேசிய கலந்துரையாடல் நீர் வழங்கல், வடிகாலமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் ரவூப் ஹகீம், கைத்தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன்,
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, மெகாபொலிஸ் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க, நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் ஆகியோருடன் விஷேட கலந்துரையாடல் ஒன்றினை நடத்தியுள்ளார். இதன் போது ஜனாதிபதியின் செயலாளர் பி. பீ. அபேகோன், பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, இராணுவ தளபதி லெப்டினன் கொமாண்டர் கிரிஷாந்த சில்வா, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திரவிஜேகுணவர்தன, விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி ஆகியோரும் பாதுகாப்பு படையினரின் பிரதானியான எயார் சீப் மார்ஷல் கோலித குணதிலக உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.
இந்த கூட்டத்தின் போது தற்போது நாட்டில் அதிகரித்துள்ள இனவாத சக்திகளின் ஆதிக்கம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. அமைச்சர்களான மனோ கணேசன், டி.எம்.சுவாமிநாதன், ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன் உள்ளிட்டோரால் சிறுபான்மை சமூகங்களான தமிழ் முஸ்லிம்களுக்கு எதிராக அதிகரித்துள்ள இனவாத சக்திகளின் செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்துக்கு நேரடியாக கொண்டு வரப்பட்டுள்ளது.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரர், பொது பலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் ஆகியோரின் கருத்துக்கள் அச்சுறுத்தல் தொடர்பில் ஜனாதிபதியிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இதனைவிட இனவாத கருத்துக்களை தூண்டியமை தொடர்பில் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீ லங்கா தெளஹீத் ஜமா அத்தின் செயலாளர் அப்துல் ராசிக் மற்றும் இனவாத செயற்பாட்டாளரான டான் பிரியசாத் ஆகியோரின் விடயங்கள் குறித்தும் பேசப்பட்டுள்ளன.
இதன்போது இனவாதம் ஊடாக அரசாங்கத்தை அசெளகரியத்துக்கு உட்படுத்தும் நிகழ்ச்சி நிரல் தொடர்பிலும் அதனால் நாட்டில் ஏற்படப் போகும் பாதிப்புக்கள் குறித்தும் அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன் போது இனவாதம் பேசுவோர் மற்றும் அதனை தூண்டுவோருக்கு எதிராக கடுமையான தண்டனைகளை விதிக்கும் விதமாக உரிய சட்ட ஏற்பாடுகளைக் கொன்டுவந்து அதனை தடுக்க நடவடிக்கைஎ டுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இதன் போது தற்போதும் அப்பணி இடம்பெற்று வருவதாகவும் மிக விரைவாக அச்சட்டம் நடைமுறைக்கு வரும் வண்ணம் நடவடிக்கைகள் டுக்கப்படும் எனவும் நீதியமைச்சர் விஜேதாஸ ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தற்போதைய சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் இனவாத செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு எதிராக ஒரு வருட சிறைத்தண்டனை வரை வழங்கும் ஏற்பாடுகள் உள்ளதாகவும் நீதியமைச்சர் ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனையடுத்து பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு விசேட உத்தரவினைப் பிறப்பித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இனவாத செயற்பாடுகளில் ஈடுபடுவோர் மற்றும் அதனை தூண்டுவோருக்கு எதிராக புதிய சட்டம் தயாராகும் நிலையில் தற்போது அந் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக தற்போதைய சட்டத்தின் கீழ் தயவு தாட்சண்யம் இன்றி உடனடி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இதனை பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவும் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதனைவிட இனவாதத்தை தூன்டும் இணையத்தளங்கள், சமூக வலைத்தள பக்கங்களை கண்காணிக்கும் விஷேட பொறிமுறை ஒன்றினை நிறுவுமாறும் ஜனாதிபதி இதன்போது ஆலோசனை வழங்கியுள்ளார். அவ்வாறானதொரு பொறிமுறைக்கான அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளதால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இவ்வாறான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் பட்சத்தில் நாட்டில் உள்ள 99 வீதமான மக்கள் அதனை எதிர்க்கப் போவதில்லை எனவும் அவர்கள் அதற்கு ஆதரவே நல்குவர் என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி அதனால் அந் நடவடிக்கைகளை உடன் செயற்படுத்துமாறு ஆலோசனையும் வழங்கியுள்ளார்.

Comments
Post a Comment