நாட்டின் பல பகுதிகளில் இன்று அடைமழை.!
வங்காள விரிகுடாவில் நிலைகொண் டுள்ள காற்றழுத்தம் காரணமாக நாட் டின் பல பாகங்களில் அடைமழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தம் நிலைமையானது இலங்கையின் தென்கிழக்கு திசை நோக்கி நகர்ந்துவருவதால் நாட்டின் பல பாகங்களிலும் குறிப்பாக, மத்திய மாகாணம், மேல் மாகாணம், சப்ரகமுவ மாகாணம், கிழக்கு மாகாணம், ஊவா மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழைபெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. மேலும் நாட்டின் கரையோர பிரதேசங்களிலும் மேற்குறிப்பிட்ட மாகாணங்களிலும் கடும் காற்று (100மி.மீ.மேல்) வீசக்கூடுமென்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

Comments
Post a Comment