புத்தளம் பாலாவி புஹாரிய்யா அரபுக் கல்லூரிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

புத்தளம் பாலாவி எருக்கலம்பிட்டி புஹாரிய்யா அரபுக் கல்லூரியில் 2017ஆம் ஆண்டுக்கான ஷரீஆப் பிரிவுக்கு புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
ஷரீஆப் பிரிவுக்காக சேர்த்துக்கொள்ளப்படவுள்ள மாணவர்கள் அர்குர்ஆணை சரளமாக ஓதக்கூடியவராகவும், 13வயது பூர்த்தியடைந்திருப்பதுடன், 15 வயதுக்கு உட்பட்டவராகவும், தேக ஆரோக்கியம், நல்லொழுக்கம் மற்றும் விவேகம் கொண்டவராகவம் இருத்தல் வேண்டும்.

குறித்த பிரிவில் இணைத்துக்கொள்ளப்படும் மாணவர்கள் ஷரீஆப் பாடங்களைக் கற்பதுடன், ஏழு வருடங்களுக்குள் புனித அல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்தல், க.பொ.த சாதாரன தரம் மற்றும் உயர் தரம், அல்ஆலிம் பிரிவு 1, பிரிவு 2, தகவல் தொழிநுட்பம், மொழிசார் பயிற்சிகள், சுய தொழில் பயிற்சி வகுப்புக்கள் உள்ளிட்ட துiறாசர்ந்த பயிற்சிகளும் கற்றுக்கொடுக்கப்படவுள்ளன.

எனவே, குறித்த அரபுக் கல்லூரியில் ஷரீஆப் பிரிவில் கற்க விரும்பும் மாணவர்கள் அதிபர் அல்லது தலைவர் புஹாரிய்யா அரபுக் கல்லூரி, நாகவில்லு, பாலாவி எனும் முகவரியுடனோ, 0322269450, 0710846561 எனும் தொலைபேசி இலக்கங்களுடனும் தொடர்பு கொள்ள முடியும்.

அத்துடன், விண்ணப்பப்படிவங்களை எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ஆம் திகதிக்கு மன்னர் கிடைக்கக் கூடியதாக பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் என்பனவற்றை தெளிவாகக் குறிப்பிட்டு அனுப்பி வைக்கவும்.

நேர்முகப்பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ஆம், 11ஆம் திகதிகளில் காலை 9 மணியளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெறும்.

Comments