ஒல்கொட் மாவத்தையில் பாரிய வாகன நெரிசல்!

கொழும்பு ஒல்கொட் மாவத்தையில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தேச ஓய்வூதியத்தை பெற்று தருமாறு கோரி இராணுவத்தினரை பாதுகாக்கும் தேசிய சக்தி மேற்கொண்டு வரும் போராட்டம் இன்றைய தினமும் நடைபெற்று வருகின்றது.

இதனால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

குறித்த விஷேட தேவையுடைய இராணுவ வீரர்கள் நேற்று முதல் புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னாள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Comments