ஏறாவூர் இரட்டைக்கொலை: சந்தேகநபர்கள் தொடர்ந்து விளக்கமறியலில்!

ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த 6 சந்தேகநபர்களையும் தொடர்ந்து எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் அறுவரும் மேலதிக நீதவானும் மாவட்ட நீதிபதியுமாகிய எம்.ஐ.எம்.றிஸ்வி முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோது இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் முகாந்திரம் வீதியில் கடந்த செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி தாயொருவரும் மகளும் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருந்ததோடு, அவர்களது நகைகள் உட்பட பெறுமதிவாய்ந்த பொருட்கள் கொலையாளிகளால் திருடிச்செல்லப்பட்டிருந்தன. கொலைசெய்யப்படுவதற்கு முன்னர் மகள் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

Comments