தீ வைக்கபட்ட பௌத்த விகாரை! பின்னணியி்ல் யார்???
கண்டி – மஹியங்கனை, ஹீன்னஸ் கிரிய மக்களின் பிரதான வழிபாட்டுத்தலமும் கண்டி மக்களின் புனித ஸ்தலமுமாக மதிக்கப்படும் பௌத்த நிலையமொன்றுக்கு இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்ட விடயம் தற்போது அதிகரித்த பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவத்தால் இன்றுபாதையை மறித்து பொது மக்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டுள்ளமையினால் கண்டி – மஹியங்கனை பிரதான வீதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதோடு மாற்று பாதையை பயன்படுத்துமாறு சாரதிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய விஷமிகளுக்கு எதிராக பொலிஸார் சட்டநடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதோடு குறித்த விடயத்தை உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment