திருகோணமலை பொதுவைத்தியசாலை வைத்தியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில்
இலங்கை மருத்துவ சபையின் சுயாதீன தன்மை ஆபத்தில் என்ற கோசத்தினை முன்வைத்து திருகோணமலை பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று புதன்கிழமை (2) மதியம் 12.40 மணியளவில் திருகோணமலை வைத்தியசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு போராட்டத்தில் கலந்து கொண்ட வைத்தியர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்: மாலேபேயில் அமைந்துள்ள தனியார் மருத்துவ பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டதை ஆரம்பத்தில் இருந்து ஏற்றுக்கொள்ளவில்லை, சரியான முறையில் வைத்தியர்கள் பயிற்சியளிக்கப்பட்டு வெளியேர வேண்டும்,
இன்று தனியார் மருத்துவ பிடங்களை ஏற்படுத்தி வைத்திய சேவையினை தரமற்ற நிலைக்கு கொண்டு செல்ல வேண்டாம் என நாங்கள் வலியுறுத்துகின்றோம் என குறிப்பிட்டார்.
அங்கு வைத்தியர்களினால் எழுப்பப்பட்ட கோசங்களும், வாசகங்களும் நோயாளிகளின் உயிர் இடை நிலையில் Saitm, தடை செய்,இலங்கை மருத்துவ சபையின் சுயாதீனத் தன்மை ஆபத்தில், மற்றும் இலங்கை மருத்துவ சபையில் வெளிச் சக்திகளின் தலையீட்டை நிறுத்து போன்ற வாசங்களை ஆர்ப்பாட்டக் காரர்கள் ஏந்தியிருந்தனர்.
ihzana fareed

Comments
Post a Comment