.ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கான ஒரு தொகை கதிரைகளும் அலுமாரிகளும் கையளிப்பு
. கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், சட்டத்தரணியுமான அல்ஹாஜ் ஜே.எம்.லாகீரின் நிதி ஒதுக்கீட்டில் தி/ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கான 35,000/= பெறுமதியான ஒரு தொகை கதிரைகளும் அலுமாரிகளும் கையளிக்கும் நிகழ்வு நேற்று (29) பாடசாலையின் அதிபர் M.M.M.முகைஸ் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், சட்டத்தரணியுமான கெளரவ அல்ஹாஜ் ஜே.எம்.லாகீர் அவர்களால் வழங்கி வைத்த போது கோட்டக்கல்வி பணிப்பாளர் K.செல்வநாயகம் ,M.M.அமீன் (ISI),திருமதி R.வசீர்(ISI), பாடசாலையின் உதவி அதிபர் , ஆசிரியர்கள், ஊர் பிரமுகர்கள் மற்றும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.
(இஹ்சனா பாரித்)
.



Comments
Post a Comment