மஹிந்த தன்னுடைய பெயரைக் காப்பாற்றிக்கொள்வது சிறந்தது!

முன்னாள் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ச தன்னுடைய பெயரைக் காப்பாற்றிக்கொள்வது நல்லது என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற வரவு செலவுதிட்டத்ததின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

புது வருடத்தில் நல்லாட்சியின் பலத்தை அதிகரிக்க பலர் இந்தப்பக்கம் வரவுள்ளனர்.

மேலும் 2020ஆம் ஆண்டு வரை மஹிந்த பொய்க் கூறி அலைந்து திரிவதை விட்டுவிட்டு தன்னுடைய பெயரைக் காப்பாற்றிக்கொள்வது சிறந்தது.

நல்லாட்சி என்பது இந்த நாட்டை கொள்ளையிட்டு உண்ட திருடர்கள்,கொலைக்காரர்களுக்கு  அல்ல மாறாக பொதுமக்களுக்கான ஆணையை மட்டுமே நல்லாட்சி வழங்கும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Comments