கூட்டு எதிர்க் கட்சி தலைவர்களுக்கு பகிரங்க சவால்!
கூட்டு எதிர்க் கட்சி தலைமைகளுக்கு தான் சவால் விடுப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.
மதில் மேல் பூனையாக இருந்துகொண்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு துரோகம் இழைக்காமல், முடியுமானால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியில் இணைந்து பதவிகளையும் பெற்றுக் காட்டுமாறு அவர் கூட்டு எதிர்கட்சிக்கு சவால் விடுத்துள்ளார்.
கூட்டு எதிர்க் கட்சி உறுப்பினர்கள் கடந்த காலம் முழுவதும் புதிய கட்சி உருவாக்குவதாக கூறித் திரிந்தனர்.
தற்பொழுது, புதிய கட்சி அமைக்கப்பட்டும் கூட அதில் உறுப்புரிமை எடுப்பதற்குத் தயங்குகின்றனர். இவர்கள் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களை பலிக்கடாவாக்கப் பார்க்கின்றார்கள் எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்கள்.

Comments
Post a Comment