இந்தியாவில் பர்தா அணிவதற்கு தடை விதிக்கக் கோரியவருக்கு நீதிபதிகள் குடுத்த பதில் இதுதான்.

பர்தா அணிவதற்கு தடை விதிக்கக்கோரிய மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சர்தார் ரவி ராஜன் சிங் என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில்."அரசு கட்டடங்கள், பழங்கால வரலாற்று இடங்கள், ரயில் மற்றும் பேருந்துகளில் புர்கா, தலைக்கவசம், முக்காடு போன்றவற்றை பாதுகாப்பு காரணங்கள் கருதி அனுமதிக்கக் கூடாது.

 ஏனென்றால் “(இஸ்லாமிய பெண்கள் முகத்தை மறைப்பது போன்று) சிலர் முகத்தை மறைத்துக் கொள்வதும் உடல் முழுவதையும் மறைக்கும் புர்கா போன்ற ஆடைகளும் மிகப்பெறிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் என்றும் இதனால் நாட்டின் குடிமக்கள் தொடர் அச்சத்தில் வாழ்கின்றனர் என்றும் இது இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 21 இன் கீழ் பாதுகாப்பான வாழ்க்கை மற்றும் சுதந்திரத்திற்கு எதிரானது.

 நாட்டில் தீவிரவாத செயல்கள் பன்மடங்காக அதிகரித்துவிட்டன. இந்த செயல்களை செய்பவர்கள் புர்காவை மதிப்பதில்லை. அதனை அவர்கள் தங்களின் தீவிரவாத செயல்களை செய்யும் ஒரு கருவியாக பயன்படுத்துகின்றனர்." என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ரோகினி மற்றும் நீதிபதி சங்கீதா திங்கரா ஷேகல் ஆகியோர் “இது கொள்கை முடிவாக இருந்தால் அதனை அரசு பார்த்துக்கொள்ளும். இதனை நாங்கள் எப்படி அனுமதிக்க முடியும்” என்றும் “இந்த விஷயத்தில் தாங்கள் தலையிட முடியாது” என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்,.

Comments