திருமலையில் இராணுவ பஸ் விபத்து: அறுவர் வைத்தியசாலையில்

திருகோணமலை-கண்டி பிரதான வீதியில் இலங்கை போக்கு வரத்துக்கு சங்கத்தின் கன்தளாய் டிப்போவிற்கு சொந்தமான பஸ்ஸும் இரானுவத்திற்கு சொந்தமான பஸ்ஸும் 91ம் கட்டை பலுகஸ்வெவ பகுதியில் இன்று (12) காலை 6.00 மணியளவில் நேருக்கு நேர் மோதியதில் ஆறு பேர் காயங்களுக்குள்ளான நிலையில் கன்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் கன்தளாய் .அல்லை இரானுவ முகாமில் கடமையாற்றும் எஸ்.ஏ.ஆர்.சன்ஜய (35 வயது) இரானுவ வீரரும் எல்பிடிய.கனேகொட பகுதியைச்சேர்ந்த டபிள்யூ.எஸ்.பேமதாஸ (57 வயது) கன்தளாய். பகுதியைச்சேர்ந்த எல்.டி.கருணாவத்தி (56வயது) ஜீ.எச்.தமயந்தி (35 வயது) டபிள்யூ.எஸ்.சேனானி (32 வயது) எச்.எம்.நன்தாவத்தி (50 வயது) ஆகியோர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் கன்தளாய் தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 mahroof Riyal

Comments