ஆறு வயது மகளை அடித்த தந்தை கைது
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆறு வயதுடைய மகளை அடித்து துன்புறுத்திய தந்தையொருவரை இருவரின் கையொப்பத்துடன் பிணையில் செல்லுமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் விஸ்வானந்த பெர்ணாண்டோ இன்று திங்கட்கிழமை (7) உத்தரவிட்டார்.
திருகோணமலை, லிங்கநகர் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவருக்கே பிணை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் தனது ஆறு வயதுடைய மகளை பள்ளிக்கூடம் செல்லவில்லையென்று சாராயம் குடித்து விட்டு தனது மகளை துன்புறுத்தும் போது அயல்வீட்டார் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து குறித்த நபரை ஞாயிற்றுக்கிழமை(6) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த நபரை பொலிஸார் இன்று (7) திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே பிணையில் செல்லுமாறு உத்தரவிட்டார்.அடுத்தமாதம் 6 வழக்குத்தவணைக்கு நீதிமன்றில் சமூகமளிக்குமாறும் உத்தரவிட்டார்.

Comments
Post a Comment