இன, மத அடிப்படைவாதிகளை அரசு அடக்க வேண்டும்!

இன, மத அடிப்படைவாதிகளால் தற்பொழுது ஏற்பட்டுள்ள நிலைக்கு எதிராக அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுத்து அவர்களை அடக்க வேண்டும் அதன் மூலம் மீண்டுமொரு இனக்கலவரம் வருவதை தடுத்து நிறுத்த வேண்டும். ஆனால் அரசு இந்த விடயத்தில் மௌனம் சாதிப்பதால்  அரசாங்கம் துணைபோகின்றதா என்ற சந்தேகம் எமக்கு  ஏற்பட்டுள்ளது.

அத்துடன் அரசியல் அமைப்பு திருத்தத்தினூடாகவே இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும் என லங்கா சமசமாஜ கட்சியின் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸவிதாரண தெரிவித்தார்.

சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

அரசியலமைப்பு திருத்தம் ஆலோசனைள் இப்பொழுமு பாராளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது. அதில் எமது கருத்துக்களையும் நாம் சமர்ப்பித்துள்ளோம். இந்த நடவடிக்கைக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கிவருகிறோம். அத்துடன் அரசாங்கம் அரசியலமைப்பு திருத்தத்தினூடாக தேசிய பிரச்சினைக்கு தீர்வு கண்டு இன, மத பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

மேலும் நாட்டுக்குள் தலைதூக்கிவரும் இன, மத அடிப்படைவாதிகளை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எதையும் அரசாங்கம் இதுவரை எடுக்கவில்லை. இவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தவேண்டும்.

இன,மதங்களுக்கு எதிரான பிரசாரம் மற்றும் தூண்டுதலை தடுப்பது அரசாங்கத்தின் கடமை. மதங்களுக்கு எதிராக யாரேனும் செயற்படுவதாக குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டால் உடனடியாக அதற்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆனால் அரசாங்கம் அவ்வாறு நடந்துகொள்வதாக தெரியவில்லை. அதனால்தான் அடிப்படைவாதிகளின் செயற்பாடுகள் அதிகரித்துவருகின்றன.

Comments