திருகோணமலை உணவகங்கள் மீது சோதனை செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளருக்கும் அச்சுறுத்தல்
(இஹ்ஸானா- பரீத்)
திருகோணமலை பிரதான பஸ் நிலையத்திற்குள்ளும, அதனை அண்டிய பகுதியில உள்ள உணவகங்கள் மீது சுகாதார அதிகாரிகள் நேற்று 15 செவ்வாய்க்கிழமை மாலை திடீர் பரிசோதiயை மேற்கொண்டார்கள்.
கிழக்கு மாகாண சுகாதார பிரதிப் பணிப்பாளர் தலைமையில் திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அடங்களாக 26 பொது சுகாதார பரிசோதகர்கள் இந்த சோதனையை மேற்கொண்டார்கள்.
இத்போது பல உணவகங்கள் சுகாதார சீர்கேடான நிலையில் காணப்படுவதை இந்த அதிகாரிகள் கண்டு கொண்டார்கள்.
இதில் சுகாதாரத்திற்கு சீர்கேடாக காணப்பட்ட சில உணவகங்களை 3 தினங்களும், பஸ்நிலையத்தின் முன்னால் கடற்படைத்தள வீதியில் உள்ள உணவகத்தை ஒரு வார காலத்திற்கு முடுமாறு அதிகாரிகளால் ஆலோசனை வழங்கப்ட்டது.
பஸ்நிலையத்திற்கு அருகாமையில் காணப்பட்ட சைவ உணவகம் மீதும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அங்கிருந்த சுகாதாரத்திற்கு சீர்கேடான சில உணவு பண்டங்களும் அதிகாரிகளால் அகற்றப்பட்டது.
பஸ் நிலையத்தின் முன்னால் உள்ள மற்றொரு உணவகத்தில் இருந்து பெருமளவிலான உணவு பண்டங்கள் அதிகாரிகளால் அகற்றப்படுவதற்காக எடுத்துச் செல்லப்பட்டது.
அதிகாரிகளின் இச்சோதனை நடவடிக்கையினால் பஸ் நிலையத்திலும் அதனை அண்டிய பகுதியிலும் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது.
மூடுவதற்கு ஆலோசனை வழங்கப்பட்ட உணவகங்கள் உரிய காலத்தில் சுகாதார சீர்கேடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு அனுமதி பெறப்பட்ட பின்னர் திறக்கப்பட வேண்டும்எனவும்,
மீறி திறக்க்படும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்தல் கொடுக்கப்ட்டுள்ளது.
இதே வேளை செவ்வாய்க்கிழமை காலை திருகோணமலை வடக்கே நிலாவெளி பிரதேசத்தில் அமைந்துள்ள 6 உல்லா பயணிகள் விடுதிகள் மீதும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
அங்கு 5 விடுதிகளில் இருந்து சுகாதார சீர்கேடான உரிய பண்டங்கள் அகற்றப்பட்டதுடன் சுகாதார அதிகாரிகளால் வேண்டிய ஆலோசனைகளும் வழங்கி வைக்கப்பட்டது.
அதே வேளை இந்த வகையில் உணவாகங்களை சோதனையிட்டு கொண்டிருந்த போது வீடியோ எடுத்துக்குவரத்திற்கு கொண்டிருந்த ஊடகவியலாளரை இரவு நேரத்தில் வீடு தேடி அச்சுறுத்தலை விடுத்திருந்ததாகவும் . இது தோடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Comments
Post a Comment