புதன்னிழமை கிண்ணியாவில் பொலிஸ் இலவச வைத்திய முகாம்
↞
ihzana fareed
இலங்கை பொலிஸ் சேவையின் 150 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு திருகோணமலை கிண்ணியா பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் இலவச வைத்திய முகாம் இடம்பெறவுள்ளன,
மக்கள் பொலிஸ் குழு அமைப்பின் ஏற்பாட்டில் ஆயுள் வேத வைத்திய முகாம், பொது சுகாதார பரிசோதகர்களின் ஆலோசனைகள் ஆகியன பொது மக்களுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளன.
குறித்த வைத்திய முகாம் எதிர்வரும் புதன்கிழமை (23) காலை கிண்ணியா பொலிஸ் நிலைய கட்டிடத்தில் இடம்பெறவுள்ளதாக மக்கள் பொலிஸ் குழுவின் பொறுப்பதிகாரியும் பொலிஸ் பரிசோதகருமான புரோஜன் பாலச்சந்திரன் தெரிவித்தார்.


Comments
Post a Comment