அடுத்த வருடம் முதல் புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டு

2017ஆம் ஆண்டு இறுதியில் சுயவிபர தகவல்கள் உள்ளடக்கப்பட்டு புதிய வெளிநாட்டு கடவுசீட்டு வெளியிடக் கூடும் என உள்நாட்டு அலுவல்கள் வயம்ப அபிவிருத்தி மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பீ.நாவின்ன தெரிவித்துள்ளார்.

நேற்று நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போது அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

புதிய கட்வுசீட்டு கணினி அமைப்பு கொண்டுள்ள கைரேகையுடன் கூடிய அமைப்பாக காணப்படும்

புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சுயவிபர தகவல்கள் உள்ளடக்கப்பட்ட வெளிநாட்டு கடவுசீட்டுகளை வெளியிடுவதற்கு அவசியமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

2017ஆம் ஆண்டு இறுதி வரையில் நவீனமயப்படுத்தப்பட்ட தகவல்கள் உள்ளடக்கப்பட்ட புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டு வெளியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை விசா சர்வதேச தரவிற்கு பொருத்தமான வகையில் புதிய தொழில்நுட்ப ஸ்ட்டிக்கர் ஒன்றை ஒட்டுவதற்கு 2016ஆம் ஆண்டு முடிந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Comments