இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் மூதூர் வலய அபிவிருத்தி தொடர்பில் பேச்சு



l99
ihzana fareed
 முஸ்லிம் காங்கிரசின்  கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான .ஜே.எம். லாகீரை  கடந்த (10) திகதி அன்று இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தினர்கள் மூதூர் காரியாலயத்தில் சந்தித்து மூதூர் வலயப் பாடசாலைகளுக்கான அபிவிருத்தி , புதிய கட்டிட நிர்மானம் தொடர்பாகவும், இடைநிறுத்தம் செய்யப்பட்ட கட்டிடங்களை புனர்நிர்மானம் செய்யக்கோரி மற்றும் ஆசிரியர் பற்றாக்குறையை எடுத்துக் கூறி ஆலோசனைகளை முன் வைத்தார்கள்.
இவர்களது கோரிக்கையை கேட்டறிந்த ஸ்ரீ ல மு காங்கிரசின்  கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான அல்ஹாஜ்.ஜே.எம். லாகீர் , அண்மையில் விசேட சபை அமர்வில் இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தினர்கள் முன் வைத்த ஆலோசனைகளை கௌரவ கிழக்கு மாகாண கல்வி அமைச்சரிடம் நேரடியாக எடுத்துரைத்தார்.

Comments