விரைவில் யாழ்.செல்ல முடியாத நிலை ஏற்படும்!
மைத்திரி ரணில் அரசானது நாட்டின் தேசிய பாதுகாப்பில் அக்கறையின்றி செயற்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதனாலேயே யாழில் பிரபாகரன் படை என்ற பெயரில் புதிய குழுக்கள் உருவாகுவதாக தெரிவித்துள்ளார்.
குறித்த குழுக்கள் காரணமாக விரைவில் யாழ்ப்பாணம் செல்ல முடியாத நிலை ஏற்படுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தேசிய பாதுகாப்பு எவ்வளவு தூரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதென்பதை அரசாங்கம் அறியாமல் செயற்படுவதாக மஹிந்த, குற்றஞ்சாட்டியுள்ளார்.
பிரபாகரன் படை என்ற பெயரில் அண்மையில் வெளியான கடிதம் தொடர்பாக அரசாங்கம் உரிய விசாரணை நடத்தி அதன் பின்னணியில் செயற்படுபவர்கள் யாரென கண்டுபிடிக்க வேண்டுமென்றும் மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, புதிய அரசியல் யாப்பின் ஊடாக நாட்டை பிளவுபடுத்துவதற்கான சூழ்ச்சியை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும், இதற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாதென்றும் மஹிந்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Comments
Post a Comment