Skip to main content
இறக்காம புத்தர் சிலை விவகாரம்: மன்சூர் எம்பி வெளியிட்டுள்ள அறிக்கை

M.C.Ansar
இறக்காமம், மாணிக்கமடு புத்தர் சிலை வைப்பினை நான் ஆதரித்து பேசியதவும், அதற்கு அனுமதி வழங்கியதாகவும் இணையதளங்களில் வெளியான செய்தியானது உண்மைக்கு புறம்பாதானதாகும். இது மக்களினால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவினதும், என் மீது அரசியல் காழ்புணர்ச்சி கொண்டவர்களின் போலிப் பிரச்சார நடவடிக்கையாகும் . என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் தெரிவித்தார்.
இது சம்பந்தமாக இன்று (06) அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையிலே – கடந்த 03ஆம் திகதி என்னுடைய தலைமையில் நடைபெற்ற இறக்காமம் பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் “அவர்கள் எந்த இடத்திலும் சிலை வைக்க முடியும் அதற்காக அவர்களிடம் யாரும் அனுமதி கேட்கத்தேவையில்லை. வைத்த சிலையை எந்த ராசாவைக் கூட்டிக்கொண்டு வந்தாலும் அகற்றமுடியாது. அவர்கள் சிலை வைக்கும் போது நம்மால் என்ன செய்ய முடியும்”. என நான் கூறியதாக இணையத்தளங்களில் பொய்யான செய்தியை பரப்பியுள்ளார்கள்.
அவ்வாறு நான் கூறவில்லை அங்கு கூறியது “குறித்த சிலை வைப்புக்கு ஒரு போதும் அனுமதி வழங்கப்போவதில்லை. அதற்கு அனுமதி வழங்க வேண்டிய அவசியமில்லை. இது நீதிமன்ற தடையுத்தரவையும் மீறிய செயலாகும்”. என்பதனையே கூறினேன்.
நான் அவ்வாறு கூறிய விடயம் சம்பந்தமான ஏதும் ஒளி, ஒலிப்பதிவுகள் இருந்தால் இவர்களினால் வெளியிட முடியும் . இதை விட்டுவிட்டு என் மீது பொய்களை பரப்பி அரசியல் இலாபம் தேடுவது அவர்களின் அரசியல் வங்குரோத்தினை வெளிப்படுத்தும் செயலாகும்.
சிலை வைக்கப்பட்ட தினத்தன்று குறித்த சம்பவம்
டைபெறப் போவதை அறிந்த நான் உடனடியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துசித பீ.வனிகசேகரவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்தச் சிலை வாய்ப்பானது நடக்கக் கூடாது என்றும் தமிழ் முஸ்லிம் மக்கள் வாழும் இப்பகுதியில் இந்தச் சிலைவைப்பானது பாரதூரமான விளைவுகளையும் , இனங்களுக்கு இடையில் பாரிய மனக்கசப்புக்களை ஏற்படுத்தும் எனவும் விளக்கி மேற்படி நிகழ்வு நடைபெறாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணித்திருந்தேன்.அரசாங்க அதிபர் சரி என எனது நியாயங்களை ஏற்றுக்கொண்ட போதும் குறித்த நிகழ்வானது ஒரு சில மணித்தியாலங்களில் நடந்தேறியதையிட்டு அதிர்ச்சியடைந்ததுடன், நான் என்னுடைய அதிருப்தியினையும் விசனத்தையும் அரச அதிபருக்குத் தெரிவித்திருந்தேன்.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் போது பொதுபலசேன, ராவண, சிங்களலே பௌத்த இனவாத அமைப்புக்களினால் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டபோதும், காணிகள் பறிக்கப்பட்டபோதும், வர்த்தக நிலையங்கள் தீ வைக்கப்பட்டபோதும், தொழுகைகள் தடுக்கப்பட்டபோதும் மஹிந்தவின் சால்வையில் தொங்கிக் கொண்டு வாய்மூடி மௌனமான பேசாமல் இருந்த அதாவுல்லாவும் மக்களினால் நிராகரிக்கப்பட்ட நிலையில் தனது செல்வாக்கினை பெரும் நோக்கில் இப்படியான பொய்களை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றார். இது அவரின் அரசியல் வங்குரோத்தினை வெளிக்காட்டுகின்றது.
நாட்டில் மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கமானது நடவடிக்கை எடுத்துவருவதாகக் கூறப்படும் நிலையில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் செறிந்துவாழும் பகுதிகளில் திட்டமிட்ட வகையில் புத்தர்சிலைகள் நிறுவப்பட்டு வருகின்றமையானது நல்லிணக்க முயற்சியிலேயே சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. குறிப்பாக வடக்கு, கிழக்கில் தமிழ் மற்றும் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் புத்தர் சிலைகள் நிறுவப்பட்டு வருகின்ற விடயமானது பல்வேறு வகையிலும்முரண்பாடுகளை தோற்றுவித்து வருகின்றதோடு, இந்நிலைமை சிறுபான்மையினரைப் பொறுத்த வரையில் மிகவும் பயங்கரமானதொன்றாகும்.
யுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் நல்லிணக்கத்திற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக அரசாங்கம் சொல்கின்றது. புத்தர் சிலையை வைத்து மற்றைய இனங்களில் மீது ஆக்கிரமிப்பை செய்து கொண்டிருக்கும் நிலையில் நல்லிணக்கம் பற்றி எவ்வாறு பேச முடியும்.
மூவின மக்கள் வாழும் அம்பாறை மாவட்டத்தில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவது சமூகங்களின் நல்லிணக்க விடயங்களில் நலிவான போக்கையே காண்பிக்கின்றது. நீதிமன்றத் தடைகளையும் மீறி எந்ததொரு சமூகத்தவரும் தங்களது மதத்தினை பிரதிபலிக்கும் அடையாளச் சின்னங்களை அனுமதியின்றி பலாத்காரமாக வைப்பதொன்பது எந்தவொரு சமூகத்தினாலும் அங்கரிக்க முடியாத செயலாகும்.
நாளை நடைபெறவுள்ள அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இது சம்பந்தமாக அனைத்து தரப்பினரோடும் பேசவுள்ளதுடன், இச்சிலை அப்புறப்படுத்துவதற்கான முழு முயற்சியினைகளையும் மேற்கொள்ளவுள்ளேன்.
Comments
Post a Comment