சுதந்திரக் கட்சி பிளவடைந்தால் அதன் நன்மை ஐ.தே.கவுக்கு!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவடைந்தால் அதன் நன்மை ஐக்கிய தேசியக் கட்சிக்கே கிடைக்கும் என கூறப்படுகின்றது.ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் மீன்பிடித்துறை அமைச்சருமான மஹிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் கட்சிகளை அமைக்கும் தரப்பினர் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியினை வலுப்படுத்தும் நோக்கில் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
புதிய கட்சியில் இணைந்து கொள்ள சிலர் முயற்சிப்பதாகவும் சிலர் இணைந்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர் இவ்வாறு இணைந்து கொண்டவர்களும் இணைந்து கொள்ள முயற்சிப்பவர்களும் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Comments
Post a Comment