மஹிந்த ஆட்சிக் காலத்தில் கோதா பயமிருந்தது!

மஹிந்த அரசாங்க காலத்தில் நாட்டில் கோதா பயமிருந்தது என அமைச்சர் விஜித் விஜயமுனி டி சொய்சா தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் தந்திரிமல பிரதேசத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

உமா ஓயா மற்றும் யான் ஓயா திட்டங்கள் கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டதாகவும் இயற்கை பற்றியோ விலங்குகள் பற்றியோ கவனம் செலுத்தாது இந்த திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டது.

கடந்த ஆட்சிக் காலத்தில் கோதபாய மீதும் அரசாங்கம் மீதும் கொண்ட அச்சம் காரணமாக இந்தத்திட்டத்திற்கு எதிர்ப்பு வெளியிடப்படவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Comments