Skip to main content

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படுவது மற்றும் மாற்றுசட்டம் தொடர்பில் பாதுகாப்பு செயலாளர்

Image result for ஹெட்டியாராச்சி
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படுவது மற்றும் மாற்றுசட்டம் ஒன்றை கொண்டுவருவதன் மூலம் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தல் தொடர்பில் இலங்கை அரசாங்கம்  ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகளுக்கு விளக்கமளித்துள்ளது. புதிய அரசியல் அமைப்பொன்று உருவாக்கப்பட்டு வரும் நிலையில் அந்த அரசியல் அமைப்பில் பயங்கரவாத தடைச்சட்டம் எவ்வாறு உள்வாங்கப்படவுள்ளது  என்பது தொடர்பிலும் ஆராயப்பட்டு வருவதாகவும் இலங்கை தரப்பு குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச அச்சுறுத்தல் மாற்றுக் தகவல் தொடர்பாடல் தொழினுட்பத்தின் அபிவிருத்தியானது உலகளாவிய ரீதியில் கருத்துக்களை வேகமாக செயல்படுத்துவதற்கும் பயங்கரவாத பிரிவுகளின் பயன்பாட்டை அவர்களின் நன்மைக்காக பயன்படுத்துவதன் காரணமாக பாதுகாப்பு நடவடிக்கைகளில் அச்சுறுத்தலாக காணப்படுவதாகவும் பாதுகாப்பு தரப்பு சுட்டிக்கட்டியுள்ளது.
கடந்த வாரம் இலங்கையில் நடைபெற்ற பயங்கரவாத தடுப்பு மற்றும் இலங்கை சட்டத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள பயங்கரவாத தடுப்புக்கான உயர்மட்ட கலந்துரையாடல் நிகழ்வில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் வினவியபோது பாதுகாப்பு செயலாளர் ஹெட்டியாராச்சி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  

Comments