போதைப்பொருள் முகவர்களாக மாறும் பொலிஸார்!

போதைப் பொருள் ஒழிப்பு திட்டத்தை செயற்படுத்தும் முன்னர், அதனுடன் தொடர்புடைய  பொலிஸ் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க தெரிவித்துள்ளார்.

கம்பஹாவின் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை தெரிவித்தார் மேலும் அங்கு கருத்து தெரிவித்த அவர்

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பொலிஸ் முக்கிய அதிகாரிகளும் பிரபல அரசியல்வாதிகளும் தொடர்புபட்டிருப்பதாகவும்

பொலிஸ் மா அதிபர் பொலிஸில் சுத்திகரிப்பை மேற்கொள்ள வேண்டும்  எனவும்

பொலிஸ் நிலையங்களில் சேவையாற்றும் அதிகாரிகள் போதைப் பொருள் கடத்தல்கார்களின் முகவர்களாக மாறியுள்ளனர் எனவும்  தெரிவித்தார்

சிறியளவில் காணப்பட்ட இந்த விடயம் கடந்த 10 வருடங்களில் அரைவாசிக்கும் மேல் அதிகரித்துள்ளதுடன்,

அரைவாசிக்கும் மேற்பட்ட பொலிஸார் போதைப் பொருள் விற்பனையாளர்களின் முகவர்களாக மாறியுள்ளனர் எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

Comments