Skip to main content
SLTJ செயலாளருக்கு விளக்கமறியல் நீடிப்பு
இலங்கை தௌஹீத் ஜமாஅத்தின் செயலாளர் அப்துல் ராசிக்கின் விளக்கமறியலை மேலும் நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேற்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபோது, அசாத் சாலி, சட்டத்தரணி சஹீத் தரப்பினர் அப்துல் ராசிக்குக்கு எதிரான வாதங்களை நீதிமன்றத்தில் முன்வைத்திருந்தனர்.
ஏற்கனவே நீதிமன்றில் பிரிதொரு வழக்கில் எந்த மதங்களுக்கும் நிந்தனை செய்யும் வகையில் கருத்துக்களை வெளியிடக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில் அப்துல் ராசிக் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
இதனால் அவரை தற்போதைய வழக்கிலிருந்து பிணையில் விடுதலை செய்ய நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அப்துல் ராசிக்கின் விளக்கமறியலை எதிர்வரும் 09ம் திகதி வரை நீடித்து நீதிபதி சந்தன கலன்சூரிய உத்தரவிட்டுள்ளார்.
Comments
Post a Comment