நவம்பர் மாதத்தில் மாத்திரம் 198 பாலியல் குற்றங்கள்.!
ஆண்டின் ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் 7592 பாரிய குற்றச் செயல்கள் பதிவாகியிருப்பதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த ஆண்டின் நவம்பர் மாதத்தில் மாத்திரம் பாரிய குற்றச்செயல்கள் 575 ஆக பதிவாகியுள்ளதுடன் அவற்றில் மனிதப் படுகொலை சம்பவங்கள் 39, பாலியல் குற்றங்கள் 198, வீடுகளை உடைத்தல் 153, கொள்ளைச் சம்பவங்கள் 64 மற்றும் திருட்டுச் சம்பவங்கள் 121 பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது
90 குற்றச்செயல்கள் குறைவடைந்திருப்பதாகவும் இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பதிவான பாரிய குற்றச் செயல்களில் அதிகளவானவை மேல் மாகாணத்தில் பதிவாகி யிருந்ததுடன், அவற் றின் எண்ணிக்கை 170 ஆக உள்ளதுடன் மேல் மாகாணத்தில் நுகேகொட தொகுதியிலேயே அதிகளவான குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளது என அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment