Skip to main content
இன்னும் 20 தலைமுறைகளுக்கு மஹிந்த ஆட்சிக்கு வர முடியாது!
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பெற்றுக்கொண்ட கடனை செலுத்துவதற்கு இன்னும் 20 தலைமுறைகளாவது செல்லும் என சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
ஹொரகொல்ல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ராஜபக்ச அரசாங்கத்தைப் போன்று கூடுதல் வட்டிக்கு கடன் பெற்றுக் கொண்ட வேறு எந்தவொரு நாடும் கிடையாது.
நூற்றுக்கு ஒன்பது வீதம் என்ற அடிப்படையில் கடன் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பெற்றுக்கொண்ட கடனில் 10 வீதத்திற்கு அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு எஞ்சிய தொகையை களவாடியுள்ளனர்.
இந்தக் கடன்களை செலுத்துவதற்கு இன்னும் 20 தலைமுறைகள் தேவைப்படும்.
இந்நிலையில் பார்க்கின்ற பொழுது அவருடைய கடன்களை அடைக்கவே இத்தகைய காலம் தேவைப்படும் பொழுது இன்னும் 20 வருடங்களுக்கு ஆட்சிப்பீடமும் ஏற முடியாத நிலையே தற்போது ஏற்பட்டுள்ளதாக அரசயில் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Comments
Post a Comment