2017 ல் அரசாங்கம் எனக்குதான்!
அரசுக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருந்தாலும், தற்போதைய அரசியல் நிலைமைகளை அவதானிக்கும் போது எதிர்காலத்தில் நிச்சியம் மாற்றம் ஏற்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பணியாற்றும் வெளிநாட்டு ஊடகங்களின் ஊடகவியலாளர்களுடன் இன்று நடத்திய சந்திப்பின்போதே மஹிந்த ராஜபக்ஸ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அரசிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியினருக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினருக்கும் இடையில் முரண்பாடு தோன்றியுள்ளதாக தெரிவித்துள்ள அவர், இவ்வாறான நிலையில் நாடு முன்னோக்கிச் செல்ல முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய மகிந்தவின் முழு நீள அரசியல் நடவடிக்கைகள் விரைவில் ஆடசியை பிடிக்கும் முனைப்புடன் செயற்பட்டு வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரவித்து வருகின்றனர்.

Comments
Post a Comment