300 மில்லியன் மோசடி: முன்னாள் பிரதியமைச்சரை கைது செய்ய முஸ்தீபு!

நீர்கொழும்பு மீன்பிடித்துறை அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட ரூ. 300 மில்லியன் முறைகேடு தொடர்பில் முன்னாள் பிரதியமைச்சர் சரத் குணவர்தனவைக் கைது செய்யும் பொருட்டு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அறியமுடிகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் நீர்கொழும்பு களப்புப் பகுதியின் அபிவிருத்திக் குழு தலைவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்றைய தினம் வாக்குமூலம் பெறுவதற்கான அழைப்பை முன்னாள் சரத் குணவர்தன புறக்கணித்துள்ள நிலையில் அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பாரிய மோசடிகளை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை மூலம் குறித்த முறைகேடு பற்றிய தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments