கிண்ணியா அல்ஹிரா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்தில் 31ம் திகதி மாபெரும் சிரமதானப் பணி


(ihzana fareed)
திருகோணமலை கிண்ணியா வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட அல்ஹிரா முஸ்லிம் மகளீர் மகா வித்தியாலயத்தில் 2017ஆம் ஆண்டுக்கான “பாடசாலையை சுத்தம் செய்து பிள்ளைகளுக்கு ஒப்படைத்தல்” எனும் தொனிப்பொருளில் மாபெரும் சிரமதானப்பணியொன்றினை எதிர்வரும் சனிக்கிழமை( 31)மேற்கொள்ளதற்கு தீர்மானித்துள்ளதாக அப்பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.

பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இச்சிரமதானப் பணியில் கிண்ணியா நகர சபை, மற்றும் விளையாட்டுக் கழகங்கள்,கிராம முன்னேற்ற சங்கங்கங்கள், சனசமூக நிலையங்கள் போன்ற அமைப்புகளின் உறுப்பினர்களையும் இச் சிரமதானப் பணியில் கலந்து கொள்ளுமாறும் கேட்டுள்ளதாக பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

Comments