Skip to main content
4000 பௌத்த பிக்குகளை திரட்டி அரசியல் யாப்பு திருத்தங்களைத் தோற்கடிப்போம்.!

.அரசியலமைப்பில் நிறைவேற்று அதிகாரத்தை இல்லாமலாக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். அவ்வாறு நடைபெற்றால் நாடு 5 மாநிலங்களாக பிரிந்துவிடும் என பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசாரதேரர் தெரிவித்தார்.
அத்துடன் 4000 பௌத்த குருமார்களை கொழும்பில் ஒன்றுகூட்டி அரசியல் யாப்பில் திருத்தங்களைத் தோற்கடிப்போம். எம்மை மீறி திருத்தங்கள் மேற்கொண்டால் நாட்டில் இரத்த ஆறு ஓடும் எனவும் தெரிவித்தார்.
பொதுபல சேனாவின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
நாட்டில் காலாகாலமாக இருந்துவரும் பிரச்சினைக்கு தீர்வு பெறவேண்டும் என்றால் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ளப்படவேண்டும். அதனூடாகவே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என தெரிவித்து இன்று அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவருகின்றன. இந்த திருத்தத்தில் மாகாணசபைகளுக்கு கூடுதலான அதிகாரங்கள் வழங்குவதற்கும் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை இல்லாமலாக்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அத்துடன் அரசியல் யாப்பில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு நாடு 5 மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டால் இலங்கையில் நல்லிணக்கம் இல்லாமல் போகும். இன, மத அடிப்படையில் நாடுபிரிந்து விடும். இதனையே இந்தியா மற்றும் மேற்கத்திய நாடுகள் எதிர்பார்க்கின்றன. எனவே அனைத்து மக்களும் வேறுபாடுகளை மறந்து அரசியல் யாப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். நாட்டுப்பற்றுள்ள முஸ்லிம்களும் தமிழர்களும் எம்முடன் இணைந்து போராட முன்வரவேண்டும்.
மேலும் கடந்த 3 ஆம் திகதி நாம் மட்டக்களப்புக்கு மேற்கொண்ட விஜயம் தடை செய்யப்பட்ட சம்பவம் அரசியல் யாப்பு திருத்தத்தினை எதிர்ப்பதற்கு எமக்கு கிடைத்த சிறந்த சந்தர்ப்பமாகும். அரசியலமைப்பு திருத்தத்தில் மாகாண சபைகளுக்கு கூடுதலான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென முன்மொழியப்பட்டுள்ளது. குறைவான அதிகாரங்கள் இருக்கும்போதே எமது விஜயம் தடுக்கப்படுகிறது என்றால் கூடுதல் அதிகாரம் வழங்கினால் என்னவாகும்? ஆளுநர்களின் அதிகாரங்களை இல்லாமற் செய்வதற்கும் கலந்துரையாடல்கள் நடைபெற்றுள்ளன. ஆளுநரின் அதிகாரங்கள் இல்லாமற் செய்யப்பட்டால் மாகாண முதலமைச்சர்கள் சர்வாதிகாரிகளாவார்கள். தற்போதைய அரசியல் யாப்பிலுள்ள சில சிறிய விடயங்களிலே மாற்றங்கள் செய்யப்படப் போவதாக மக்கள் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள். அரசியல் யாப்பு திருத்தங்களை சாதித்துக் கொள்வதற்காக பொதுபலசேனா முஸ்லிம்கள் மீது மீண்டும் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக பொய்ப்பிரசாரம் செய்கிறார்கள். நாம் முஸ்லிம்களுக்கு எதிரானவர்களல்ல. முஸ்லிம் அடிப்படைவாதத்தையே எதிர்க்கிறோம்.
மேலும் நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக குரல் கொடுப்பதாக தெரிவித்துவரும் ஜாதிக ஹெல உறுமய அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக தங்கள் நிலைப்பாட்டை பகிரங்கமாக மக்களுக்கு தெரிவிக்கவேண்டும். அத்துடன் அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ள இடமளிக்க கூடாது. அவ்வாறு திருத்தங்கள் ஏற்பட்டால் நாட்டின் ஒற்றையாட்சிக்கு பாரிய அச்சுறுத்தலாக அமைந்துவிடும் என நாட்டில் இருக்கும் சிரேஷ்ட சட்ட அறிஞர்கள் எம்மிடம் தெரிவித்துள்ளனர்.
எனவே, அரசியலமைப்பில் ஜனாதிப தியின் நிறைவேற்று அதிகாரம் இல்லா மலாக்ககப்படக்கூடாது. நிறை வேற்று அதிகாரம் இருந்தால் மாத்திரமே ஆக் கிரமிப்புகளுக்கு எதிராக ஜனாதிபதியினால் நடவடிக்கை எடுக்க முடியும். நிறை வேற்று அதிகாரத்தை இல்லாமலாக்குவதற்கல்ல, அதனை அசைப்பதற்கும் நாம் இடமளிக்க மாட்டோம். அதற்காக தேசப்பற்றுள்ள அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றார்
Comments
Post a Comment