5000 ரூபா அறிவிப்பு தொடர்பில் விசாரணை அவசியம்!

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் 5000 ரூபா அறிவிப்பு தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கூட்டு எதிர்க் கட்சி இதனை அறிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கு 2 தினங்களுக்கு முன்னர் மத்திய வங்கியிலிருந்து இரகசியமான முறையில் 1300 கோடி ரூபா பணத்தை திருட்டுத்தனமாக  வெளியேற்றியுள்ளதாக செய்துள்ள அறிவிப்பு பயங்கரமான ஒன்று எனவும், ரூபாய் தாள் நாணயத்தின் மீது நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்காகவும் நிதி அமைச்சரின் இக்கருத்து தொடர்பில் விசாரணை அவசியம் எனவும் கூட்டு எதிர்க் கட்சி கோரியுள்ளது.

Comments