73 வயதில் O/L பரீட்சை எழுதிய பெண்மணி!

கல்வி கற்பதற்கு வயதெல்லை கிடையாது என்பதை எடுத்தியம்பும் வயதில் தனது 73வது வயதில் க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதி அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளார் மாத்தறையைச் செர்ந்த 73 வயதான எஸ். கல்யாணி எனும் பெண்மணி.
தகவல் தொழிநுட்ப பாட பரீட்சையை இம்முறை எழுதியுள்ள அவர் அடுத்த வருடம் ஹிந்தி மொழி பாடத்துக்கான பரீட்சையை எழுதவுள்ளதாகவும் தனது அறிவைப் பெருக்கிக் கொள்வதற்காகவே தான் தொடர்ந்தும் எதையாவது கற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments