மஹிந்த ‘புதுக் கதை’ சொல்கிறார்: BBS

தமது வெற்றியைத் தடுப்பதற்காகவே பொது பல சேனா கடந்த தேர்தலில் தமக்கு ஆதரவளித்திருந்ததாக மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ள நிலையில் தாம் அவரது வெற்றிக்காகவே உழைத்ததாக தெரிவித்துள்ளது பொது பல சேனா.

நேற்றைய தினம் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலன்த விதானகே கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ள அதேவேளை தாம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து மஹிந்தவின் வெற்றியைத் தடுக்கவில்லையெனவும் விளக்கமளித்துள்ளார்.

சுற்றியிருப்பவர்களின் பேச்சைக் கேட்டே மஹிந்த தற்போது புதுக் கதை சொல்வதாகவும் அவ்வமைப்பு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments