ஜம்மியத்துல் உலமா சபையை சமூகவலைத்தளங்களில் காரசாரமாக விமர்சனம் செய்வது அறிவுடமையாகாது

சமூகத்தை பிரதிநிதித்துவம் செய்யும் எந்தவொரு தலைமையும், பொது நிறுவனங்களும், இஸ்லாமிய அமைப்புக்களும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவையும் அல்ல.
ஜம்மியாஹ்வை விமர்சிப்பதற்கு ஒரு சில காரணங்கள் இருக்கலாம் ஆனால் அந்த சமூக சன்மார்கத் தலைமையை பலப்படுத்துவதற்கு ஆயிரம் நியாயங்கள் இருக்கின்றன.
பொதுபலசேனா அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்திற்கு அவர்கள் பதில் அளிக்க முடியாது என்று சொல்லவில்லை, மாறாக சில சட்ட ஆலோசனைகளின் பெயரில் கடிதம் அனுபப்பட்டுள்ள முறை குறித்து சில கருத்துக்கள் வெளியிடப் பட்டுள்ளன.
அண்மைக்காலமாக நிபுணத்துவ ஆலோசனைகளை பெற்றே ஜம்மியத்துல் உலமா சில விவகாரங்களை கையாண்டு வருகின்றமை குறிப்பிடத் தக்கதாகும். அவ்வப்போது எல்லா முஸ்லிம் அமைப்புக்களயும், அரசியல் பிரதிநிதிகளையும், சமூக ஆர்வளர்களையும், புத்திஜீவிகளையும் அழைத்து கலந்துரையாடிய பின்னர் கூட்டுப் பொறுப்புடன் தீர்மானங்களை எடுக்கிறது.
நானும் நீங்களும் கொண்டுள்ள மாறுபட்ட கருத்துக்கள் கூட அங்கு ஆராயப்படுகின்றது, சில விவகாரங்களை சமூகத் தளத்தில் சமயோசிதமாக கையாள்வதே சிறந்த அணுகுமுறையாகும்.

Comments