விடாது துரத்தும் ஹிருனிகா ; மீண்டும் விசாரணைக்கு உத்தரவு

சிறைச்சாலையில் துமிந்த சில்வா சொகுசான வாழ்க்கை வாழ்வதோடு பிறந்தநாள் கொண்டாட்டத்தையும் அமோகமாக நடாத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர பாராளுமன்றில் முன் வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் முறையான விசாரணை இடம்பெறும் வரை தான் ஓயப்போவதில்லையென தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், முன்னர் இக்குற்றச்சாட்டு தொடர்பில் அமைச்சர் சுவாமிநாதனின் உத்தரவின் பேரில் இடம்பெற்ற விசாரணையில் போதிய ஆதாரம் கிடைக்கவில்லையென சிறைச்சாலை நிர்வாகம் தெரிவித்திருந்தது. ஆயினும் தன்னிடம் அதற்கான வீடியோ உட்பட ஆதாரங்கள் இருப்பதாக ஹிருனிகா மீண்டும் தெரிவித்து வரும் நிலையில், மீண்டும் விசாரணையொன்றுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
சிறைச்சாலைப் புலனாய்வுப் பிரிவு இம்முறை விசாரணையில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தகக்து.

Comments